-3.1 C
New York
Monday, March 2, 2026
spot_img

இலங்கை மனித உரிமை ஆணைகுழு ஆணையாளர் கலாநிதி நிமால் கருணசிறி காலமானார்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி நிமால் கருணசிறி காலமானார். உடல்நல பாதிப்புகள் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அறிவித்துள்ளது .

அவரது மறைவு தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு வெளியிட்ட இரங்கல் செய்தியில்,

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் (டிசம்பர் 10, 2020 – ஜூன் 17, 2023) கலாநிதி நிமல் கருணாசிறி, 2023 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் திகதி சிறு சுகவீனமுற்ற பின்னர் காலமானார் என்று ஆழ்ந்த வருத்தத்துடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவிக்கிறது.

கலாநிதி நிமல் கருணாசிறியின் மறைவிற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஆணையாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.   

Related Articles

Latest Articles