சூரிச்சில் உள்ள யூத கலைக்கூடங்களின் சுவர்களில் பாலஸ்தீனிய ஆதரவு மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதாக சூரிச் நகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு, தெரியாத நபர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும், பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
ஐந்து இடங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் சூரிச் பொலிசார் தெரிவித்தனர்.
ஒரு யூத காட்சியகத்தின் முகப்பில் “சுதந்திர பாலஸ்தீனம்” என்றும், அதற்கு முன்னால் உள்ள நடைபாதையில் “இனப்படுகொலைக்கு கலை இல்லை” என்றும் வர்ணம் பூசப்பட்டுள்ளது.
இவ்வாறான வெறுப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட மற்ற இரண்டு காட்சியகங்களில், யூத கலைஞர்களின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றத்திற்கு அப்பால் இந்தச் செயற்பாடு தண்டனைக்குரியதாக இருக்குமா என்று பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
ஆங்கில மூலம் – theswisstimes.ch