சுவிஸ் விமானப்படை கான்டன் வாடில் உள்ள, பயேன் (Payerne) மற்றும் அவென்செஸ் ( Avenches ) மாநகராட்சிகளுக்கு இடையே உள்ள நெடுஞ்சாலையில் நேற்று இராணுவப் பயிற்சியை மேற்கொண்டது.
“அல்பா யூனோ” என அழைக்கப்படும் இந்த பயிற்சிக்காக, நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில், போர் விமானங்கள் தரையிறங்கின.
எட்டு F/A-18 போர் விமானங்கள் இந்த தரையிறக்க மற்றும் மேலேழும் பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் என்று சுவிஸ் விமானப்படை ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்தப் பயிற்சியை முன்னிட்டு இன்று அதிகாலை 6 மணி வரை, குறித்த பகுதியில் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டிருந்தன.
போக்குவரத்துகள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டிருந்தன.