சுவிற்சர்லாந்தில், செவ்வாய்கிழமை அதிகாலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, சூரிச்சின் சுவிஸ் நில அதிர்வு சேவை தெரிவித்துள்ளது.
ஸ்விஸ் மற்றும் கிளாரஸ் மாகாணங்களுக்கு இடையே உள்ள ப்ரேகல் கணவாயில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் சுவிட்சர்லாந்து முழுவதும் உணரப்பட்டிருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை 2.34 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், வாகிடால் ஏரிக்கு தென்மேற்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தாக சுவிஸ் நில அதிர்வு சேவை குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால், சேதங்கள் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்று ஷ்விஸ் கன்டோன் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.