25.2 C
New York
Thursday, July 31, 2025
spot_img

அச்சுவேலியில் நேற்றிரவு பெற்றோல் குண்டு வீச்சு.

யாழ்ப்பாணம்- அச்சுவேலியில்  நேற்று இரவு வீடு ஒன்றின் மீது இனம் தெரியாத குழுவினர் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அச்சுவேலி மேற்கு, கருமந்திரதுறை வீதியிலுள்ள பாலசிங்கம் சதானந்தன் என்பவரின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இவர் பண்ணை ஒன்றை நடத்தி வரும் நிலையில்,  சகோதரியுடன் சொத்து சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்துள்ளது.

நேற்று, சகோதரியின் உறவினர் ஒருவரை சதானந்தன் தாக்கியதில் அவரின் கை முறிந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று இரவு 8 மணியளவில்  6 மோட்டார் சைக்கிளிலும், ஒரு முச்சக்கர வண்டியிலும் சென்ற குழுவினர்,  வீட்டின் மீது இரண்டு பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

ஒரு குண்டு மட்டும் வெடித்து தீப்பற்றியதையடுத்து வீட்டின் சமையலறை பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.

வீட்டில் இருந்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Articles

Latest Articles