17.8 C
New York
Monday, May 25, 2026
spot_img

எரிபொருட்களின் விலைகள் நள்ளிரவில் குறைப்பு!

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 355 ரூபாயாக நிர்ணயிக்கப்படவுள்ளது.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 16 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 317 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 202 ரூபாவுக்கு விற்கப்படுகிறது.

அதேவேளை, சினோபெக் நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 355 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 19 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 314 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Articles

Latest Articles