யாழ். நண்பர்களின் 10 ஆவது வருட நிறைவை முன்னிட்டு, இராணுவ அதிகாரி ஒருவர் மதிப்பளிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்வில் மூத்த சமூகப் பிரமுகர்கள் கௌரவிக்கப்பட்டனர். கலாநிதி ஆறு திருமுருகன் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்களுக்கும் விருதுகளை வட மாகாண அளுநர் பிஎஸ்எம் சார்ள்ஸ் வழங்கினார்.
இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சிக்கும் விசேட விருது வழங்கப்பட்டுள்ளது.
போர்க்காலத்தில் மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டவராக குற்றம்சாட்டப்பட்ட இவர் சில காலம் யாழ். மாவட்டப் படைத் தளபதியாகவும் இருந்தவர்.
தற்போது புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக பணியாற்றும் மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து விருது வழங்க வேண்டியதன் அவசியம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.