22.3 C
New York
Saturday, July 27, 2024
spot_img

சித்திரைச் சிறுமாரியால் நிம்மதி – மீண்டும் வாட்டுமா வெயில்?

கடந்த 13ம் திகதி இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது தீவிரமடைந்துள்ளதாகவும் இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 20ம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது என்றும், யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளரும், அங்கீகரிக்கப்பட்ட வானிலையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர், தனது முகநூலில் இட்டுள்ள பதிவில்,

“குறிப்பாக 18,19 ம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

வருடந்தோறும் சித்திரை சிறு மாரி என்ற கருத்து எங்களிடையே மிக நீண்ட காலமாக உள்ளது. இதனைச் சிலர் ‘சித்திரைக்குழப்பம்’ என்ற பெயரிலும் அழைப்பர். இம்முறை சித்திரைத் குழப்பம் சித்திரை மாத இறுதிநாட்களில் (தமிழ் மாதம்) காற்றுச் சுழற்சியோடு ஆரம்பித்துள்ளது.

அதேவேளை எதிர்வரும் 20ம் திகதிக்கு பின்னர் கிழக்கு வங்காள விரிகுடாவில் மேலுமொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது. எனினும் இதனை எதிர்வரும் 19 ம் திகதிக்கு பின்னரே உறுதிப்படுத்த முடியும்.

அதேவேளை இந்த நிகழ்வுகளின் பின்னர் மீண்டும் வெப்பநிலை அதிகரிக்கும்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Latest Articles