அடுத்த தசாப்தங்களில் இலங்கையின் சனத்தொகை 1 மில்லியனால் குறையும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதுருகிரிய தேசிய தோட்ட முகாமைத்துவ நிறுவகத்தின் புதிய கல்வி மற்றும் நிர்வாக வளாகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையின் சனத்தொகை, 1 மில்லியனால் குறையவுள்ள அதேவேளை, ஆப்பிரிக்காவிலிருந்து இந்தோனேசியா வரை, எம்மைச் சுற்றியுள்ள நாடுகளின் சனத் தொகை குறைந்தது 1 பில்லியனாக அதிகரிக்கும்.
இதுவே எமது சந்தையாக இருக்கும், அதனை இலக்கு வைத்து விவசாய ஏற்றுமதிகளைச் செய்வதற்கு நாம் தயாராக வேண்டும்” என்றும் ஜனாதிபதி ரணில் கூறியுள்ளார்.
இலங்கையில் குழந்தைகள் பிறப்பு வீதம் கணிசமாக குறைந்து வருவதாக அண்மையில் மருத்துவர்கள் தகவல் வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.