16.6 C
New York
Tuesday, September 16, 2025
spot_img

பிரித்தானியாவில் விலையுயர்ந்த ஹோட்டலை கொள்வனவு செய்த இலங்கை

பிரித்தானியாவின் டெர்பியில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்று இலங்கை நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.

செயின்ட் மேரிஸ் கேட்டில் உள்ள தரம் வாய்ந்த இந்த ஹோட்டலை, டெடிகம குழுமத்தின்; ரஸ்மி டெடிகம மற்றும் பீட்டர் கரன் ஆகியோர் வெளியிடப்படாத தொகைக்கு கொள்வனவு செய்துள்ளனர்.

2010 ஆம் ஆண்டு மறைந்த மகாராணி இரண்டாவது எலிசபெத் இந்த ஹோட்டலில் உணவருந்தியபோது அதன் தலைமை சமையல்காரருக்கு தமது தனிப்பட்ட நன்றியை தெரிவித்திருந்தார்.

இந்த ஹோட்டலில் 38 தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட படுக்கையறைகள் உள்ளன. இது ஒரு விக்டோரியன் சொத்து ஆகும், இது முன்பு ஒரு பொலிஸ் நிலையமாகவும், நகரசபை தலைமையகமாகவும் செயற்பட்டது.

2008 ஆம் ஆண்டில், முந்தைய உரிமையாளர்களான தி ஃபைனெஸ் கலெக்சன், இந்த கட்டிடத்தை கொள்வனவு செய்து ஹோட்டலாக மாற்றியது.

Related Articles

Latest Articles