15.9 C
New York
Monday, June 16, 2025
spot_img

அதிகரிக்கும் கோடை வெயில்.. 24 கோடி குழந்தைகளுக்கு ஆபத்து

வெயில்காலம் தொடங்கியுள்ள நிலையில் இப்போதே இந்தியாவின் பல பகுதிகளிலும் வெயில் கொளுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவை தாண்டியுள்ளது. ஏப்ரல் மாதமே வெயில் இப்படி வாட்டி வரும் நிலையில் அக்னி நட்சத்திரம் எப்படி இருக்குமோ என மக்கள் கவலையடைந்துள்ளனர்.

இந்நிலையில் தெற்காசிய நாடுகளான இந்தியா, வங்கதேசம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இந்த ஆண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என யுனிசெஃப் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வழக்கமாக வெயில் காலங்களில் ஏற்படும் பருவக்கால நோய்களால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இந்தியா உட்பட்ட தெற்கு ஆசிய நாடுகளில் சுமார் 24 கோடி குழந்தைகள் வெயில் காரணமாக பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு பருத்தி ஆடைகளை அணிவிக்கவும், வெயிலில் அதிகம் விளையாடுவதை தவிரக்கவும் வேண்டும் எனவும், வெயில் தொடர்பான மருத்துவ பிரச்சினைகளுக்கான சிகிச்சைகளுக்கு மருத்துவமனைகள் தயாராக இருத்தல் வேண்டும் என்றும் யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles