17.4 C
New York
Sunday, September 8, 2024
spot_img

தண்ணீர் மாசுபாடு முதல் மதுப்பழக்கம் வரை… தற்காப்பது எப்படி?

மனித உடலில் கல்லீரல் என்பது மிக முக்கியமான உறுப்பு. தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவது, ரத்தத்தை சுத்தப்படுத்துவது என மிக முக்கியப் பணிகளை மேற்கொள்கிறது.

இப்படி முக்கியத்துவம் வாய்ந்த கல்லீரலில் ஏற்படும் வீக்கம் சார்ந்த பிரச்னையே, ஹெபடைடிஸ் (Hepatitis).

ஹெபடைடிஸில் பல வகை உள்ளன’’ என்று கூறும் திருச்சியைச் சேர்ந்த பொது மருத்துவர் ஆர்.பி. சரவணன், அது குறித்து விளக்குகிறார்.

ஹெபடைடிஸ் என்பது, பொதுவாக வைரஸ் தொற்றால் ஏற்படும் கல்லீரல் வீக்கம். அதைத் தவிரவும், நாள்பட்ட குடிப்பழக்கம், நோயெதிர்ப்பு சக்தி குறைவு, ஒட்டுண்ணிகளால் ஏற்படும் பாதிப்பு, சிக்குன்குனியா, டெங்கு போன்ற காய்ச்சல்களின் பாதிப்புகள், எலிகளால் பரவக்கூடிய நோய்களின் விளைவுகளாலும் ஹெபடைடிஸ் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உண்டு. இதில், ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி, இ என ஐந்து முக்கிய வகைகள் உள்ளன.

Related Articles

Latest Articles