24.4 C
New York
Tuesday, July 1, 2025
spot_img

நடிகர் விஜய் தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டிற்குத் திகதி குறித்திருக்கிறார்

நடிகர் விஜய் தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டிற்குத் திகதி குறித்திருக்கிறார். இந்த விடயம் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த பெப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என கட்சி துவங்கி, 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்கப் போவதாகவும் உறுதிப்படுத்தினார் விஜய்.

நேரடியாகவும், டிஜிட்டலாகவும் தனது கட்சிக்கு தொண்டர்களை சேர்க்க ஆரம்பித்த நிலையில், மக்களவைத் தேர்தல் வர, சைலன்ட்டாக இருந்தது தவெக.

இப்போது, தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில், ஜூனில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டவுடன் மீண்டும் கட்சிப் பணிகளை விறுவிறுப்பாக தொடங்க இருக்கின்றனர்.

அந்த வகையில், முன்பே வெளியான தகவலின்படி தவெகவின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளனர்.

நடிகர் விஜயின் பிறந்தநாள் ஜூன் மாதம் 22-ம் திகதி வருகிறது. அதற்கு முன்பே தேர்தல் முடிவும் அறிவிக்கப்பட்டு விடும் என்பதால் தன்னுடைய பிறந்தநாளின் போதே சென்டிமென்ட்டாக கட்சியின் முதல் மாநாட்டினை மதுரையில் நடத்த முடிவு செய்திருக்கிறார் விஜய். இதுகுறித்தான அறிவிப்பும் சீக்கிரம் வரும் என்கிறார்கள்.

Related Articles

Latest Articles