யாழ்ப்பாணம் – கந்தர்மடம் மணல்தறை வீதிப் பகுதியில் சில சந்தேகத்துக்கிடமான வீடொன்றை முற்றுகையிட்டு நால்வரை கைது செய்தனர்.
வீட்டு உரிமையாளர்,இரண்டு பெண்கள் மற்றொரு ஆண் என நால்வர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்த தலைமையிலான யாழ்.மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது இரு பெண்களும் ஆண் ஒருவரும் மற்றும் வீட்டின் உரிமையாளரும் கைது செய்தனர்.
அழகிகள் நீர்வேலி, பருத்தித்துறை பகுதிகளை சேர்ந்தவர்கள். அவர்களிடம் வந்த வாடிக்கையாளர் கோப்பாயை சேர்ந்த இளைஞன்.
இதேவேளை மற்றொருவர் பொலிஸார் வருவதை கண்டு மதில் பாய்ந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.