வியாஸ்காந்த் தனது கிரிக்கெட் பயணத்தில் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த ஆளுநர், இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சன் ரைசஸ் ஹைதரபாத் அணிக்காக விளையாடியுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வியாஸ்காந்திற்கு வடக்கு மாகாணம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
வடக்கு மாகாணத்திலிருந்து தனது கிரிக்கெட் பயிற்சியை பெற்ற இவர் இலங்கைக்கு பெருமிதத்தை பெற்றுக்கொடுத்துள்ளதுடன், யாழ் மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.