டெல்லி மெயில் அறிக்கையின்படி, பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.
அதில், இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியில் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டுபிடிக்கப்படுள்ளது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பூமியில் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் மறைந்துவிடும்.
அந்த நேரத்தில் பூமியின் வெப்பநிலை 70 டிகிரி செல்ஸியஸை எட்டும். அத்தகைய சூழலில் பூமியில் எந்த உயிரினமும் வாழ இயலாது. அனைத்தும் வெப்பத்தின் காரணமாக அழிந்துவிடும்.
பூமியில் நாம் கார்பனை வெளியேற்றும் வேகத்தின் காரணமாக இந்த அழிவு விரைவில் நிகழ வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல நிகழ்ந்திருக்கலாம் என்றும், அதன் காரணமாக டைனோசர்கள் அழிந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.