தெற்கு சீனாவின் குவாங்டொங்கிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
கன மழை காரணமாக தெற்கு சீனாவின் குவாங்டொங்கிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று திடீரென மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் அங்கு பயணித்த சுமார் 20 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் சிக்குண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த அனர்தத்தினால், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் தற்போது சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,