26.5 C
New York
Monday, July 14, 2025
spot_img

இதய ஆரோக்கியத்திற்கு உதவும் யோகாசனங்கள்!

உத்கடாசனா நமது தொடை தசைகள் மற்றும் கணுக்கால்களை வலுப்படுத்துகிறது.  இந்த ஆசனம் நமது தோள்பட்டைகள், முதுகு, இடுப்பு மற்றும் பிட்டம் ஆகிய உறுப்புகளை சீராக்குகிறது. மேலும் நமது தசைகளை இறுக்கி, அவற்றுக்குள்ளேயே வலிமையைத் தருகிறது.

தட்டையான பாதங்களினால் சிரமப்படுபவா்களுக்கு உத்கடாசனா மிகப் பொிய நன்மையைச் செய்கிறது. அதாவது தட்டைப் பாதப் பிரச்சினையை படிப்படியாகக் குணப்படுத்துகிறது. * இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த உத்கடாசனா மிகவும் உதவியாக இருக்கிறது. 

இது இதயத்தை மேம்படுத்தி, இதயத்தையும் அதன் துடிப்பையும் தூண்டிவிடுகிறது. 

பதங்குஸ்தாசனம் (பெருவிரல் போஸ்),

இந்த ஆசனம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகக் கருதப்படுகிறது. பதங்குஸ்தாசனத்தில் கால்களின் விரல்களை கைகளின் கட்டைவிரல்களால் தொட வேண்டும். இந்த ஆசனம் செய்வதால் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைகிறது. 

இது ரத்த ஓட்டத்தை சீராக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது. இந்த ஆசனம் செய்வது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  

உத்தனாசனம் (முன்னோக்கி நிற்கும் வளைவு),

உத்தனாசனம் செய்வது இதய ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். 

இது முக்கியமாக கணுக்கால், முழங்கால்கள், தொடைகளில் வலிமையை உருவாக்குகிறது. 

இது தசையின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கிறது. உத்தனாசனம் செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முதுகெலும்பின் வலிமையை அதிகரிக்கிறது. உத்தாசனத்தில் உடலின் மேல் பகுதி தரையை நோக்கி வளைவதுடன், தலை பாதங்களைத் தொடுவது போல இருக்க வேண்டும். 

இதன் காரணமாக, இதயத்தை நோக்கி ரத்த ஓட்டம் அதிகரிக்கத் தொடங்கலாம். இது இதய செல்திறனை மேம்படுத்துகிறது.

Related Articles

Latest Articles