15.9 C
New York
Monday, June 16, 2025
spot_img

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று ஏற்பட்ட திடீர் பள்ளத்தினால் 19 பேர் உயிரிழப்பு

பீஜிங், தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இன்று ஏற்பட்ட திடீர் பள்ளத்தினால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவத்தின் போது நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த 18 வாகனங்கள் அடுத்தடுத்து பள்ளத்தில் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பள்ளமானது 184.3 சதுர மீற்றர்  அளவை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles