இலங்கை – பொலன்னறுவை, இசட் டி கால்வாயுடன் இணைக்கப்பட்ட கால்வாயில் விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
கால்வாயில் விழுந்த குழந்தையை தமது வீட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பிரதேசவாசி ஒருவர் மீட்டுள்ளார்.
பொலன்னறுவை, வெலிகந்த, சிங்கபுர, ஜெயவிக்ரம கிராமத்தை சேர்ந்த இசுரு ஜயநாத் பண்டார என்ற ஒரு வயது மற்றும் பத்து மாதமான ஆண் குழந்தையே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளது.
நேற்று பிற்பகல் தாய் வீட்டில் இல்லாத போது, குழந்தை தனது மூத்த சகோதரியுடன் யாருக்கும் தெரியாமல் கால்வாய்க்கு சென்றுள்ளனர்.
இந்த பாதுகாப்பு வேலியின் கதவு திறந்திருந்ததால் குழந்தை திடீரென கால்வாய் அருகே வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.
தங்கள் குழந்தை வீட்டில் இல்லாததை அவதானித்த உறவினர்கள், அப்பகுதி மக்களின் உதவியுடன் குழந்தையை தேடிய போதும், குழந்தை கிடைக்கவில்லை.