23.5 C
New York
Saturday, July 12, 2025
spot_img

குருணாகல் பிரதான வீதியில் விபத்து

புத்தளம் – குருணாகல் பிரதான வீதியின் கல்லடி பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளத்திலிருந்து ஆனமடுவ பகுதிக்குச் சென்ற லொறியுடன் ஆனமடுவ பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற வேன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் வேனிற்குப் பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின் போது வேனில் பயணித்த சாரதி உட்பட மூவரில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

ஒருவர் சிறு காயங்களுக்குள்ளாகிய நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles