1.3 C
New York
Saturday, January 17, 2026
spot_img

சுவிட்சர்லாந்தில் உள்ள தாய்மார்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!

சுவிட்சர்லாந்தில் தாய்மார்களைக் குறிவைத்து இடம்பெறும் ஒரு விநோத மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுவிட்சர்லாந்திலுள்ள தாய்மார்களுக்கு, “அம்மா, எனது மொபைலில் ஏதோ பிரச்சினை, எனக்கு கொஞ்சம் பணத்தட்டுப்பாடு, இந்த எண்ணின் வாட்ஸ்அப் செய்தி ஒன்று அனுப்பமுடியுமா? என்றும் கொஞ்சம் பணம் அனுப்பமுடியுமா” என்றும் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்படுகின்றது.

அதிகாரிகள் எச்சரிக்கை
மேற்கண்டவாறு ஒரு செய்தி வந்தால் , தங்களது பிள்ளையை அவருடைய மொபைல் எண்ணில் அழைத்துப் தொடர்பு கொள்ளுமாறும், அல்லது அந்த செய்திக்கு பதிலளிக்காதீர்கள் என்றும் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்கள் முன்வரை, பிரெஞ்சு மொழி அல்லது ஜெர்மன் மொழி பேசும் பெற்றோருக்கு ஆங்கிலத்தில் செய்தி அனுப்பப்பட்டுவந்த நிலையில், தற்போது அவரவர் பேசும் மொழியிலேயே இந்த மோசடி செய்திகள் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இது ஒரு நவீன மோசடி என்றும், பணமோ அல்லது வங்கி விபரங்களையோ அல்லது இரகசிய இலக்கங்களையோ மொபைலில் அனுப்பாதீர்கள் என பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Related Articles

Latest Articles