தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தண்டனை அனுபவித்து வரும் 779 கைதிகள் அரச பொது மன்னிப்பின் கீழ் விடுதலை பெற உள்ளனர்.
சிறப்பு பொது மன்னிப்புக்கு தகுதியான 768 கைதிகளும் 11 பெண் கைதிகளும் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
ஒவ்வொரு சிறைச்சாலையிலிருந்தும் குறித்த கைதிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஆக்ரமிப்பைத் தடுக்க, இரும்பு கவசம் அமைத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் என அமெரிக்கா வலியுத்தியுள்ளது.
ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிகளுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, இந்தோ பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் ஆக்ரமிப்பைத் தடுக்க, இரும்பு கவசம் அமைத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் என அமெரிக்கா வலியுத்தியுள்ளது