கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையிலும், தன் பிள்ளைகளின் நலனை பெரிதும் விரும்பியவர் இளவரசி டயானா. ஆனால், அவரது கடைசி ஆசையை அவர்கள் நிறைவேற்றினாற்போல் தெரியவில்லை!
இளவரசி டயானாவின் கடைசி ஆசை
பிள்ளைகள் மீது அதீத அக்கறையும் அன்பும் கொண்டவர் இளவரசி டயானா. அவர்கள் எப்போதும் ஒற்றுமையாக ஒருக்கவேண்டும் என்பதே அவரது ஆசை.
சிறு வயதில் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள் வில்லியமும் ஹரியும். உலகமே எதிர்த்தாலும், அவர்கள் அப்படியே ஒற்றுமையாக, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கவேண்டுமென டயானா விரும்பினார் என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான Charles Rae.
ஆனால், அவர்கள் இப்போது அப்படியில்லை, அவர்கள் பிரிந்து மிகவும் தூரமாக போய்விட்டார்கள் என்பது கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது என்கிறார் அவர்.
தன் பிள்ளைகள் இருவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதுதான் டயானாவின் இறுதி ஆசை. ஆனால், அவர்கள் இப்போது அப்படியில்லை என்பதை அறிந்தால் டயானா மனம் உடைந்துபோவார் என்கிறார்