ஜப்பானின் புக்குஷிமா பகுதியை 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதாக அந்நாட்டின் வானிலை ஆய்வகம் அறிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் டோக்கியோ (Tokyo) வரை உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பூமிக்கு அடியில் 32 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய – மத்தியதரைகடல் பகுதிகளுக்கான நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.