ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்திற்கு முன்கூட்டிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
திருச்சபை பேச்சாளர் அருட்தந்தை. சிறில் காமினி பெர்ணான்டோ ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கர்தினால் ரஞ்சித்துக்கு முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வெளியான ஊகங்கள் முற்றிலும் பொய்யானவை என இன்று ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
2019ம்ஆண்டு உயிர்த்த ஞாயிறுதின ஆராதனைகளில் கர்தினால் கலந்துகொள்ளவில்லை என்பதும் பொய்யான தகவல்.
ஏப்பிரல் 20ம் திகதி ஆராதனைகளில் அவர் கலந்துகொண்டார்.
கொழும்பு பேராயர் வழமையாக சனிக்கிழமை நள்ளிரவு ஆராதனைகளில் மாத்திரம் கலந்துகொள்வார் என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.