-8.1 C
New York
Sunday, December 22, 2024
spot_img

யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் இராணுவ பிரசன்னத்துடன் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல்! மாணவர் ஒன்றியம்

யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் இடம்பெறுத் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஊடாக பல்கலைக்கழக பீடாதிபதிகளுக்கு அக்கடிதம் அனுப்பபட்டுள்ளது.

அக்கடிதத்தில், எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பலமொனதொரு திரளாக எழுவதற்கும் தமிழ் மக்களின் உரிமைக்கான பயணத்தில் தவிர்க்க முடியாத குரலாக ஒலிப்பதற்கும், 

பல்கலைக்கழக அறிவுசார் பலமான பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களான உங்கள் அனைவரதும் நேரடியான மற்றும் மறைமுகமான பங்களிப்புக்களும் ஆதரவுகளுமே காரணமாகும். 

இருப்பினும் சில விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தவும் அறியத்தருவதற்குமானதொரு சூழல் தற்போது எழுந்திருக்கின்றமையால் அதனை இந்தக் கடிதம் வாயிலாக அறியத்தருகின்றோம்.

1. தமிழ் மக்களின் கூட்டு உணர்வுகளோடு தொடர்புடைய தினங்களில் களியாட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்களிற்கு ஒப்புதல் வழங்குவதனையும் அவற்றினை முன்னெடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வதனையும் தவிர்க்குமாறும், 

அன்றைய தினங்களில் பல்கலைக்கழக நாட்காட்டியில் நிகழ்வுகள் இடம்பெறாமையை உறுதி செய்யுமாறும் வேண்டிக் கொள்கிறோம்.

அண்மையில்க் கூட தமிழ் மக்களின் உணர்வுகளைப் உதாசீனப்படுத்தி அவமதிக்கும் விதத்தில் நிகழ்வொன்று  இராணுவப் பிரசன்னத்தோடு இடம்பெற்றிருந்தது, 

அது தமிழ் மக்களின் ஆறாத மனங்களை மேலும் புண்படுத்தியிருந்ததோடு, பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles