சுவிட்சர்லாந்தில் செவ்வாய்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது,9 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் இரண்டு கிலோகிராம் கொக்கெய்ன் போதைப் பொருள்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச அளவில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, பெல்ஜியத்தில் நடந்து வரும் விசாரணைகளின் தொடர்ச்சியாக இந்த போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
எந்த கன்டோனல் பொலிசார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டன என்பதை Fedpol வெளியிடவில்லை.
இந்த வழக்கில் சுவிஸ் மற்றும் பெல்ஜியம் அதிகாரிகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம் Fedpol ஆல் ஒருங்கிணைக்கப்பட்டது.
சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பை சேர்ந்த பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து,ஒஸ்ரியா, ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் 17 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆங்கில மூலம் – swissinfo.ch