-3.5 C
New York
Friday, January 16, 2026
spot_img

வடக்கில் கனடா துணைத் தூதரகம்- தூதுவரிடம் கோரிக்கை.

கனடா துணைத் தூதரகத்தை வடக்கில் நிறுவி, மக்களுக்கு உதவவேண்டும் எனவும், கனடா தூதரக விசா அலுவலகம் வடக்குப் பகுதியில அமைய வேண்டும் என்றும், கனேடியத் தூதுவரிடம், வலியுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வோல்ஷ் , நேற்று இந்துசமயத் தலைவர்களை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.  

ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், ஆன்மீகச்சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

இதன்போது, கனடாவில் வாழும் எம்மக்களைக் கௌரவமாக வழிநடத்துவதற்கு நல்லை ஆதீன முதல்வர் கனேடியத் தூதுவரிடம் நன்றி கூறினார்.

மேலும், இக்கலந்துரையாடலில் பங்குபற்றிய மூவரும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக கனடா இலங்கை அரசுடன் பேசவேண்டும் என்பதனை வலியுறுத்தினர்.

அத்துடன், கனடா துணைத்தூதரகத்தை வடக்கில் நிறுவி, மக்களுக்கு உதவவேண்டும் எனவும், கனடா தூதுவராலய விசா அலுவலகம் வடக்குப் பகுதியில அமைய வேண்டிதன் அவசியத்தையும் அவர்கள் விளக்கினர்.

போரில் இறந்தவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் வழிபாடு செய்யும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

Related Articles

Latest Articles