சுவிஸ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை பலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிப்பதற்கு எதிராக வாக்களித்துள்ளது.
சமூக ஜனநாயகக் கட்சியினால் நேற்று முன்வைக்கப்பட்ட பிரேரணையை பிரதிநிதிகள் சபை நிராகரித்துள்ளது.
பலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிப்பதற்கு சார்பான பிரேரணைக்கு ஆதரவாக 61 வாக்குகள் கிடைத்தன.
அதேவேளை, 131 வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டன. 2 பேர் வாக்களிக்கவில்லை.
சமூக ஜனநாயகக் கட்சியும் பசுமை கட்சியினருமே, இந்தப் பிரேரணையை ஆதரித்தனர்.