4.1 C
New York
Friday, November 22, 2024
spot_img

சுவிஸ் உணவுகளில் அதிக உப்பு – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்.

சுவிற்சர்லாந்தில், உணவுப் பொருட்களில் அதிகம் உப்புச் சேர்க்கப்படுவதாக, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை அலுவலகம் (FSVO) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

சுவிசில், ஆண்கள் ஒரு நாளைக்கு பத்து கிராம் என்ற அளவில் உப்பை உட்கொள்கிறார்கள். இது ஒருவர் சேர்க்க வேண்டிய உப்பின் அளவை விட இரண்டு மடங்கு ஆகும்.

45-59 வயதுடைய ஆண்கள் அதிக உப்பை உட்கொள்கின்றனர் என்றும், இதன் சராசரி அளவு ஒரு நாளைக்கு 11 கிராம் என இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை,  சுவிஸ் பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 7.4 கிராம் உப்பை உட்கொள்கிறார்கள்.

60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 6.7 கிராம் உப்பை உட்கொண்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.

சுவிஸ் உப்பு ஆய்வு 2022-2023  இன்படி,  சுவிற்சர்லாந்தின் அனைத்துப் பகுதிகளிலும் அதிகளவு உப்பு நுகர்வு செய்யப்படுவது தெளிவாகத் தெரியவந்துள்ளது.

இருப்பினும், ஆய்வில் பதிலளித்தவர்களில் 90% பேர் தாங்கள் உணவில் உப்பு சேர்க்கவில்லை அல்லது எப்போதாவது மட்டுமே உப்பு சேர்ப்பதாக  கூறியுள்ளனர்.

மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை அலுவலகத்தின் கூற்றுப்படி, பதப்படுத்தப்பட்ட உணவுகளே, மக்களின் அதிகப்படியான உப்பு உட்கொள்ளலுக்குக் காரணமாக உள்ளது.

ஒரு நபர் தனது பரிந்துரைக்கப்பட்ட தினசரி உப்பின் அளவு, ஒரு ஆயத்த உணவில் இருந்தே கிடைத்து விடுகிறது.

மனிதர்கள் அதிகபட்சமாக  தினசரி உட்கொள்ளக் கூடிய உப்பின் அளவு, ஐந்து கிராம் என, உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்துள்ளது.

Related Articles

Latest Articles