22.3 C
New York
Monday, August 31, 2026
spot_img

யாழ்ப்பாணம் கொண்டு சென்ற 82 கிலோ கடலாமை இறைச்சியுடன் இருவர் கைது!

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட 82 கிலோ கடலாமை இறைச்சியுடன், 2 சந்தேக நபர்கள் நேற்று பள்ளமடு பிரதான வீதியில் மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீன்கள் பொதி செய்து கொண்டு செல்லும் போர்வையில், கடலாமை இறைச்சி பொதி செய்யப்பட்டு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது.  

இராணுவ புலனாய்வு துறைக்கு கிடைத்த  தகவலின் அடிப்படையில் மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் பள்ளமடு வீதியில் வைத்து குறித்த வாகனத்தை சோதனை செய்த போது குறித்த கடலாமை இறைச்சி மீட்கப்பட்டுள்ளது.

அதை கொண்டு சென்ற இரண்டு நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related Articles

Latest Articles