11.4 C
New York
Saturday, October 19, 2024
spot_img

கடைசியாக வாழ்ந்த மனிதரையும் இழந்த கிராமம்!

தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரே ஒரு மனிதரான முதியவரும், உயிரிழந்துள்ளார்.

நெல்லை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் மேல செக்காரக்குடிக்கு அடுத்து அமைந்துள்ளது மீனாட்சிபுரம் கிராம்.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மீனாட்சிபுரத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 1,269.

படிப்படியாக இந்த ஊரின் மக்கள் தொகை குறைந்தது. இந்த ஊரில் இருந்த மக்கள் அனைவரும் பிழைப்புக்காக ஊரை விட்டு வெளியேறி விட்டனர்.

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விவசாயம் பொய்த்து போனது. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் மக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வந்துள்ளனர்.

இதனால் ஊரில் இருந்து மக்கள் ஒவ்வொருவராக, வீடு, விவசாய நிலம் அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு, வெளியூர்களுக்கு சென்று குடியேறிவிட்டனர்.

கடைசியாக மீனாட்சிபுரத்தில் 75 வயதான கந்தசாமி என்ற முதியவர் மட்டுமே வசித்து வந்தார்.

ஊரை விட்டு சென்ற மக்கள் மீண்டும் ஊருக்கு வர வேண்டும், ஊர் செழிக்க வேண்டும் என்ற ஆசையோடு அவர் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அவரது ஆசை நிறைவேறாமலேயே அவர் இயற்கை எய்தியுள்ளார்.

அவரது உடலை அடக்கம் செய்வதற்காக முதியவர் கந்தசாமியின் உறவினர்கள் மட்டுமின்றி, அந்த ஊரில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலானவர்கள் கிராமத்துக்கு வந்து முதியவருக்கு அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Articles

Latest Articles