20.2 C
New York
Wednesday, October 15, 2025
spot_img

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் அறைக்குள் சடலமாக மீட்பு!

இலங்கைக்கான  பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட்  மாரடைப்பினால் மரணமாகியுள்ளார். அவருக்கு வயது 53 ஆகும்.

நேற்று  இராஜகிரிய பகுதியிலுள்ள  உத்தியோகபூர்வ வீட்டில் இருந்து பிரான்ஸ் தூதுவர்  சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் நேற்றுக் காலை தனது அறையில் இருந்து வெளியே வராத நிலையில், உள்ளே நுழைந்து பார்த்த போதே, சடலமாக காணப்பட்டுள்ளார்.

அவருக்கு திடீர் இதய செயலிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணைகளை விரைந்து முடித்து, சடலத்தை ஒப்படைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles