16.7 C
New York
Wednesday, September 17, 2025
spot_img

கனடாவில் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த தமிழ் இளைஞன் கைது!

கனடாவில்  சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததாக பிராட்போர் மேற்கு பகுதியை சேர்ந்த 20 வயதான ஜனார்த்தன் சிவரஞ்சன் என்ற இளைஞன் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக யோர்க் பிராந்தியப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் துஷ்பிரயோகம் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. எனினும் இதுவரை நீதிமன்றத்தில் அவரது குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை.

18 வயதுக்கு குறைந்தவர் போல் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு. சமூக ஊடகம் மூலமாகவும், நிகழ்வு ஒன்றிலும் 16 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஜனார்த்தன் சிவரஞ்சன் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இவரினால் மேலும் சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிசார் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டு, அவ்வாறானவர்கள் இருந்தால் தகவல் அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles