8.9 C
New York
Thursday, April 30, 2026
spot_img

இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர்!

யாழ்ப்பாணம் தொல்புரம் மத்தியில் நேற்று முன்தினம் சிவில் உடையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர், இளைஞன் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டவர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் விசேட பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 22 ஆம் இலக்க விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles