-4.5 C
New York
Sunday, December 22, 2024
spot_img

அரசாங்கத்தினால் இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசியின் தரம் மற்றும் பணத்திற்காக வழங்கப்படுவது தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள்

அரசாங்கத்தினால் இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசியின் தரம் மற்றும் பணத்திற்காக வழங்கப்படுவது தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன்படி, ஒரு வாரத்திற்குள் ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன அறிவித்துள்ளார்.

மேலும், இந்த நிகழ்ச்சித் திட்டம் மேலும் தொடர்ந்து நடத்தப்படுகிறதா என்பதைக் கண்டறிய சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்கவும் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Related Articles

Latest Articles