தாய்வானின் கிழக்கு கடற்கரையில் திங்கட்கிழமை இரவு ஆரம்பித்து செவ்வாய் அதிகாலை வரை 6.3 ரிச்டர் அளவில் 80க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டில் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தாய்வானின் தலைநகர் தாய்பேயில் நிலநடுக்கத்தால் சில கட்டிடங்கள் குலுங்கியுள்ளது.
தாய்வானின் கிழக்கு மாகாணமான ஹுவாலியன்னை மையமாகக் கொண்டிருந்துள்ளது.
அங்கு கடந்த 3 ஆம் திகதி 7.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு, 14 பேர் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து தாய்வானில் நூற்றுக்கணக்கான நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
Hualien இல் உள்ள தீயணைப்புத் துறை செவ்வாயன்று அதிகாலையில், ஏப்ரல் 3 ஆம் தேதி ஏற்கனவே சேதமடைந்த ஒரு ஹோட்டல் இப்போது செயல்பாட்டில் இல்லை என்று கூறியது.