-6.7 C
New York
Sunday, December 22, 2024
spot_img

கஹகல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயம்

பண்டாரவளை கஹகல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலி பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற ஹப்புத்தளை பகுதியிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 6 பேரும் சிகிச்சைகளுக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பண்டாரவளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles