விசேட அதிரடிப் படைவீரர் ஒருவர் மீது 17 வயதுடைய இளைஞன் தாக்குதல் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் பெரிய கரிசல் பிரதேசத்தில் நேற்று முன்தினம் மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.குற்றச் செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களை கைது செய்ய முயன்ற விசேட அதிரடிப்படை அதிகாரி மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குற்றச் செயல் ஒன்றைப் புரிவதற்காக தயார் நிலையில் இருந்த நபர் ஒருவரை கைது செய்வதற்காக விசேட அதிரடிப்படையினர் மன்னார் பெரிய கரிசல் பிரதேசத்தில் திடீர் சுற்றிவளைப்பை நடத்தியுள்ளனர்.