நிகவெரட்டிய, பொல்கஹவெல, மஹவ மற்றும் ஆனமடுவ ஆகிய அரச அரிசி களஞ்சியசாலைகளில் இருந்து 2022 ஆம் ஆண்டுக்கான 30 இலட்சம் கிலோ நெல் காணாமல் போனமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் விசாரணைகளின் முதற்கட்ட அறிக்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட(Puthik Ittamalkoda)தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் போன நெல் கையிருப்பின் பெறுமதி 1 பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நெல் விற்பனைச் சபை நெல் கொள்வனவுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.