-8.1 C
New York
Sunday, December 22, 2024
spot_img

இரத்த மழை தொடர்பில் பிரித்தனியா எச்சரிக்கை!

ஸ்பெயின்(Spain) நாட்டுக்குப் பயணிக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகளுக்கு இரத்த மழை தொடர்பில் பிரித்தானியாவால்(UK) எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டுக்குப் பயணிக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகள், இரத்த மழை என்னும் இயற்கை நிகழ்வை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும், அந்த நிகழ்வின் காரணமாக, வெளிச்சம் போதாமையால் விமானங்கள் இரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாகலாம் என பிரித்தானிய வெளியுறவு துறை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் சில இடங்களில் வெப்ப அலை காரணமாக கடுமையான வெயில் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

இரத்த மழை
இதனால், சஹாரா பாலைவனத்தில் காணப்படும் தூசுக்கள் ஸ்பெயின் நாட்டின் பல பகுதிகளை மூட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருவதால், இந்த தூசியும் மழையும் கலந்து இரத்த மழை என்னும் சிவப்பு நிற மழை உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரத்த மழையினால் வெளிச்சம் குறையும் எனவும், விமானங்களால் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஸ்பெயினுக்கு சென்றுள்ள பிரித்தானியர்கள் குறித்த இயற்கை மாறுபாட்டால் பாதிக்கப்படக்கூடும் என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் எச்சரித்துள்ளது.

Related Articles

Latest Articles