இலங்கையில் முதன்முறையாக , பல வகையான விதைகள் ஏற்றுமதிக்கு தயார் செய்யப்பட்டுள்ளன.
மிளகாய், கத்தரிக்காய், கறி மிளகாய், வெண்டிக்காய், சோளம் உள்ளிட்ட விதைகள் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டு, அவை ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல வெளிநாடுகளில் இருந்தும் அந்த விதைகளுக்கு அதிக கேள்வி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் , விவசாயத்துறை வல்லுனர்கள் மூலம் விதைகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.