கற்பிட்டி கண்டகுழி கலப்பில் தற்பொழுது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நீர்ச் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்பொழுது கற்பிட்டிக்கு வருகைத் தந்துள்ள அதிகளவிலான சுற்றுலா பயணிகள் கண்டக்குழி பகுதியில் “kite Surfing” எனப்படும் நீர்ச்சருக்கள் விளைட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் கற்பிட்டியில் மாத்திரமே நீர்ச்சருக்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நீர்ச்சருக்கள் விளையாட்டு சுமார் 15 வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நீர்ச்சருக்கல் விளையாட்டில் ஈடுபடுவதற்கு கற்பிட்டி கண்டகுழி கலப்பு ஆழமற்று காணப்படுவதினால் விளையாற்றில் ஈடுபடுபவர்களுக்கு மிக இலகுவாக காணப்படுவதாகவும், எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நீர்ச்சருக்கள் விளையாட்டில் ஈடுபடுவதற்கு மிகவும் சிறந்த இடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலத்த காற்று வீசுவதுடன், தினமும் மதியம் 12 மணி முதல் 4.30 மணி வரை காற்று அதிகமாக வீசுவது இந்த விளையாட்டுக்கு மிகவும் சிறந்தது என அந்த விளையாட்டில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டினர் குறிப்பிடுகின்றனர்.
ஜேர்மன், பிரான்ஸ், ஆஸ்திரியா, இந்தியா, கனடா, சுவிஸர்லாந்து மற்றும் பல நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருகின்றனர்.
நீர்ச்சருக்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கு இலங்கையர்களே பயிற்சிகளை வழங்குகின்றதாக இலங்கைப் பயிற்றுவிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், இரண்டு அல்லது மூன்று வாரங்கள் என்ற குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் தினமும் குறித்த விளையாட்டில் ஈடுபட்டு மீண்டும் தமது நாடுகளுக்குச் செல்வதாக இலங்கை பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டது.
தற்பொழுது மீண்டும் சுற்றுலா துறையினர் வருகைத் தருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையிலுள்ள இவ்வாறான சுற்றுலா மையங்களை மேம்படுத்துவதனூடாக தொழில் வாய்ப்பை அதிகரித்து அந்நியச் செலாவனியை ஈட்டமுடியும்.