இச்சம்பவமானது ஓவல் சுரங்க ரயில் நிலையம் அருகாமையில் நடந்துள்ளது. சம்பவத்தை அடுத்து பொலிசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
சில பொலிஸ் அதிகாரிகள் உட்பட 9 பேர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய பொலிஸ் வாகனத்தில் இருந்து ஒருவரை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டுள்ளனர்.
ஆனால் எவருக்கும் உயிருப்பு ஆபத்தான வகையில் காயம் ஏற்படவில்லை என்றே முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த பகுதியில் வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன், விசாரணையும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது