-1.1 C
New York
Friday, January 16, 2026
spot_img

யாழ்.குடத்தனை பகுதியில் ஆயுதங்கள் மீட்பு

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – குடத்தனை பகுதி கடற்கரையில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள்  பருத்தி துறைப் பொலிசாரால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

குடத்தனை வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள பொது காணி ஒன்றில் இருந்தே குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது மீட்கப்பட்ட வெடி பொருட்கள் மற்றும் துப்பாக்கி என்பன இயங்கு நிலையில் காணப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதன்போது ரி- 56 ரக துப்பாக்கி இரண்டு, அதற்கான மகசின் எட்டு, 30 பொட்டிகளில் அடைத்து வை வைக்கப்பட்டிருந்த 750 தோட்டாகள் மற்றும் 82 ரக கையெறிகுண்டு – 08 என்பன மீட்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles