யாழ்.நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான வடதாரகை பயணிகள் படகின் நேர ஒழுங்கில் இன்றைய தினம் தீடீரென மாற்றப்பட்டதால் பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்தனர்.
நெடுந்தீவு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (14)நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெறுகின்ற நிலையில் கூட்டத்தில் பங்கேற்பவர்களின் வசதிக்கேற்ப வடதாரகை பொது போக்குவரத்து நேர ஒழுங்கு மாற்றப்பட்டமையால் நெடுந்தீவுக்கு செல்வதற்காக வழமையான நேரத்திற்கு குறிக்கட்டுவான் வந்த பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்தனர்.