16.6 C
New York
Tuesday, September 16, 2025
spot_img

மைத்திரி யாழில்:நொண்டியாடு அழுத கதை!

இலங்கை நாடாளுமன்றில் கடன் மறுசீரமைப்பு விவாதம் நடந்து கொண்டிருக்கையில் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரான மைத்திரிக்கு யாழ்ப்பாணத்தில் காண்பிக்கப்பட்டுவரும் பவிசு மக்களிடையே நையாண்டியாகியுள்ளது.

தனது மூன்று நாள் பயணத்தில் யாழ்ப்பாணம் சந்தை தொகுதியை மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டார்.

யாழ்ப்பாணத்தின் அடையாளமாக விளங்கும் உணவுப்பொருட்களான பனை உற்பத்திப் பொருட்கள், கருவாடு, பழங்கள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்யும் ஆர்வத்தோடு இவ்விஜயத்தை அவர் மேற்கொண்டிருந்தார்.

சந்தைத் தொகுதி வியாபாரிகள், பொது மக்களையும் சந்தித்த அவர் சிநேகபூர்வமான உரையாடல்களில் ஈடுபட்டார்.

அங்கஜன் இராமநாதன் அவர்களின் அழைப்பின்பேரில் யாழ்ப்பாணத்துக்கான 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மைத்திரிபால சிறிசேன, பல்வேறுபட்ட சமூக மட்ட நிகழ்வுகளிலும், மக்கள் சந்திப்புகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

Related Articles

Latest Articles