நம்ம ஊர் இளைஞர்கள் நல்ல கம்பெனியில் வேலைக்குத் திண்டாடி வரும் நிலையில், சீன இளைஞர்கள் அதிக ஊதியத்தைத் தரும் வேலையை விட்டு சின்ன சின்ன வேலைகளுக்குச் செல்கிறார்களாம். நம்ம ஊரில் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. பட்டம் பெற்றவர்கள் கூட பல லட்சம் பேர் இங்கே குரூப் 4 தேர்வுகளை எழுதுகிறார்கள்.
கொரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தைப் புரட்டிப் போட்டுவிட்டது.. உலகின் டாப் பொருளாதாரங்கள் கூட இப்போது திணறி வருவதே இதற்கு உதாரணம். அமெரிக்கா, ஐரோப்பியா என எந்தவொரு நாடும் இதில் இருந்து தப்பவில்லை. இதனால் அந்நாட்டில் வேலையிழப்பும் கடுமையாக ஏற்பட்டு வருகிறது. கூகுள், பேஸ்புக், ட்விட்டர் என அனைத்து டாப் நிறுவனங்களும் ஆட்குறைப்பில் இறங்கின. டாப் நிலையில் இருந்த ஊழியர்களும் வேலையை விட்டு நீக்கப்பட்ட நிகழ்வுகள் நடந்தன. வேலைவாய்ப்பு மார்கெட் இவ்வளவு இக்கட்டானதாக மாறியுள்ள நிலையில், இப்போது ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறக் கூட ஊழியர்கள் ஒரு முறைக்குப் பல முறை யோசிக்கிறார்கள். ஆனால், சீனாவில் இப்போது நடப்பதைப் பார்த்தால் உங்களால் நம்பவே முடியாது. ஏனென்றால், அங்குள்ள இளைஞர்கள் தங்கள் வேலைகளை அசால்டாக ரிசைன் செய்கிறார்களாம். இவர்கள் ஏதோ சின்ன சின்ன வேலைகளில் இருப்பவர்கள் என நினைக்க வேண்டாம்.