இலங்கையிலுள்ள தமிழ் மக்களைப் பாதுகாக்க தனிநாடு அமைத்துக்கொடுக்கவேண்டும் என இந்தியாவின் தலைமை அமைச்சராகப் பதவியேற்றுள்ள மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை முன்வைக்கவுள்ளதாக மதுரை 293ஆவது ஆதீனமான ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை இன்று சந்தித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்க காரணமானவர்களும் தேர்தலில் வெற்றி பெற்று விட்டார்களே என மன வருத்தம் உள்ளது. இந்த காரணத்துக்காகவே காங்கிரஸ் கட்சியால் மத்தியில் ஆள முடியவில்லை.
வெற்றி பெற்றுள்ள தலைமை அமைச்சர் நரேந்திர மோடியிடம் இரண்டு கோரிக்கைகளை முன் வைக்கிறேன். இந்திரா காந்தி தாரை வார்த்து கொடுத்த கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். கச்சத்தீவு மீட்டெடுத்தால் தமிழகத்தின் மீன்வளம் அதிகரிக்கும். ஆகவே கச்சத்தீவு மீட்டு தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பாதுகாக்க பிரதமர் மோடி தமிழ் ஈழத்தை ஏற்படுத்த வேண்டும், என்றார்